குஜராத்தில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

குஜராத் மாநிலம் பஞ்ச்மகால் மாவட்டத்தில் உள்ள போடேலி நகரில் இருந்து 7 சிறுவர்கள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் ஹலோல் நகரில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு காரில் சென்றனர். பின்னர் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, பாத் என்ற கிராமம் அருகே, கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, தறிகெட்டு ஓடி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், காரில் பயணம் செய்த சிறுவர்கள் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.