கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் மரத்தின் மீது மோதி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு..!

229

பெரம்பலூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் மரத்தின் மீது மோதிய விபத்தில் பெண் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த ஜெயரத்தினம் என்பவர் தனது குடும்பத்துடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று விட்டு ஆம்னி வேனில் திரும்பி கொண்டிருந்தார். பெரம்பலூர் அருகே ஆத்தூர் சாலையில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன், சாலையோரம் இருந்த புளியமரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ஜெயரத்தினம் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஓட்டுனர் மற்றும் 3 பெண்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.