இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்து..!

303

பவானி அருகே இரு சக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.

தர்மபுரியை சேர்ந்தவர் பச்சியப்பன். கல் உடைக்கும் தொழிலாளியான இவர் சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அங்கிருந்த நூற்பாலை அருகே சென்றபோது மேட்டுர் நோக்கி சென்ற தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பச்சியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சித்தோடு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.