செங்கற்களை லாரியில் அடுக்கி வைக்கும் போது சரிந்து விழுந்தது தொழிலாளி உயிரிழப்பு..!

230

சோழவரம் அருகே லாரியில் செங்கற்களை ஏற்றும் போது, செங்கல் சரிந்து தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டடம் சோழவரம் அருகே புதுக்குப்பம் கிராமத்தில் தனியார் செங்கல் சூளை செயல்பட்டு வருகிறது. இன்று காலை சூளையில் இருந்த செங்கற்களை லாரியில் ஏற்றும் பணியில் ஜெயராமன் என்பவர் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாரா விதமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த செங்கல் சரிந்து விழுந்ததில் ஜெயராமன் சிக்கி கொண்டார். இதனையடுத்து படுகாயமடைந்த ஜெயராமனை சக ஊழியர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து உயிரிழந்த தொழிலாளியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.