தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் ஏ.சி.சண்முகம் சந்திப்பு..!

195

புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏசி சண்முகம், தேமுதிக தலைவர் விஜயகாந்தைச் சந்தித்துப் பேசினார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமையகத்துக்குப் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏசி சண்முகம், அவர் மனைவி லலிதா லட்சுமி ஆகியோர் சென்று விஜயகாந்தைச் சந்தித்தனர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சண்முகம், அதிமுக தலைமையிலான மெகா கூட்டணி 40தொகுதிகளிலும் வெற்றிபெறும் எனத் தெரிவித்தார்.