அவுரங்காபாத் ஆயுத கடத்தல் வழக்கில் அபுஜிண்டால் உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

250

அவுரங்காபாத் ஆயுத கடத்தல் வழக்கில் அபுஜிண்டால் உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு பயங்கர ஆயுதங்கள் கடத்தப்படுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல்துறை நடத்திய சோதனையில் இரண்டு கார்களில் கடத்தப்பட்ட 30 கிலோ ஆர்.டி.எக்ஸ்., வெடிபொருள், 10 ஏ.கே.47 துப்பாக்கிகள், 3,200 தோட்டாக்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக தீவிரவாதி அபுஜிண்டால் உட்பட 22 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த, நரேந்திர மோடி கொலை செய்ய, இவர்கள் திட்டமிட்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இவர்கள் மீதான வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த பத்து ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், வழக்கிலிருந்து பத்து பேர் விடுவிக்கப்பட்டு, 11 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். அவர்களுக்குரிய தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில், தீவிரவாதி அபுஜிண்டால் உட்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனையும், 2 பேருக்கு தலா 14 ஆண்டுகள் சிறை தண்டனையும் 3 பேருக்கு தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.