பெற்றோரிடம் சேர்ந்து வாழ விடாமல் தங்களை துன்புறுத்தி வருபவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கரூர் காவல்நிலையத்தில் திருநங்ககைகள் மனு அளித்தனர்.

254

பெற்றோரிடம் சேர்ந்து வாழ விடாமல் தங்களை துன்புறுத்தி வருபவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கரூர் காவல்நிலையத்தில் திருநங்ககைகள் மனு அளித்தனர்.
கரூர் மாவட்டம் மாவடியான் கோவில் தெருவை சேர்ந்த திருநங்கை அழகி, இவரது தோழிகள் துர்காதேவி, ஸ்ரீ, நந்தினி ஆகிய 4 பேரும் விழுப்புரத்தை சேர்ந்த திருநங்கை அபிராமி என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்தநிலையில் தாங்கள் தங்களது பெற்றோருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும், இதற்கு அபிராமி எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறி கரூர் மாவட்ட மகளிர் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தனர். அதில் தங்களது பெற்றோருடன் சேர்வதற்கு ஒவ்வொருவரும் தலா ஒரு லட்சம் ரூபாய் கொடுக்கவேண்டும் என்று அபிராமி மிரட்டுவதாக அவர்கள் தெரிவித்தனர்.