விங் கமாண்டர் அபிநந்தனுக்கு துறைரீதியான சோதனைகள் நிறைவு..!

61

இந்தியாவின் பெருமையை உலகுக்கு பறைசாற்றிய விங் கமாண்டர் அபிநந்தனுக்கு அனைத்து சோதனைகளும் நிறைவடைந்ததை அடுத்து, மருத்துவ விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளதாக விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கம் காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40 இந்திய துணை ராணுவ படையினர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து, இந்தியா நடத்திய பதில் தாக்குதலில் விமானி அபிநந்தன் பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டு, 2 நாட்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து, இந்தியா வந்தடைந்த அபிநந்தனுக்கு முதல்கட்ட சிகிச்சைகள் மற்றும் விசாரணைகள் நடைபெற்றன. இந்நிலையில் விமானப்படை வீரர் அபிநந்தனிடம் துறைரீதியான மற்றும் அமைப்பு ரீதியிலான விசாரணை நிறைவு பெற்றது என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மருத்துவர்களின் அறிவுரைப்படி அபிநந்தனுக்கு சில வாரங்கள் மருத்துவ விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் விமானப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.