மம்தாவின் புதிய கூட்டணிக்கு உமர் அப்துல்லாஹ் ஆதரவு..!

312

தங்களிடம் இருக்கும் கருத்து வேறுபாடுகளை களைந்து பா.ஜ.கவுக்கு எதிராக முன்னேறி செல்லப்போவதாக ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்த பின் பேட்டியளித்த அவர், தற்போது தேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக நிலவும் சூழல் குறித்து இருவரும் விவாதித்ததாக கூறினார். பிராந்திய கட்சிகள் குறிப்பிட்ட இடங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதாக சுட்டிக் காட்டிய உமர் அப்துல்லாஹ், தங்களிடம் இருக்கும் கருத்து வேறுபாடுகளை களைந்து பா.ஜ.கவுக்கு எதிராக முன்னேறி செல்லப்போவதாக தெரிவித்தார்.

புதிய கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தற்போது தனிநபர் பெயரை குறிப்பிடுவதன் மூலம் தங்களை பிரிக்க வேண்டாம் என்றும், பிராந்திய கட்சிகள் பா.ஜ.கவுக்கு எதிராக செயல்படுவதில் தெளிவாக இருப்பதாகவும் கூறினார்.