ஏமனில் முன்னாள் அதிபர் அப்துல்லா சலே சுட்டுக்கொலை!

832

ஏமனில் புரட்சிபடையினர் நடத்திய தாக்குதலில் முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலே சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஏமன் அதிபராக பதவி வகித்து வந்த அலி அப்துல்லா சலே, கடந்த 2012-ம் ஆண்டு ஏற்பட்ட புரட்சியால் அரசியல் நெருக்கடிக்கு பணிந்து பதவி விலகினார். எனினும் சலே ஆதரவு படையினருக்கும் ஹூதி புரட்சி படையினருக்கும் அடிக்கடி போர் ஏற்பட்டு வந்தது. தலைநகர் சானா நகரில் இரு தரப்பிலும் கடந்த ஒருவாரமாக நடந்த சண்டையில் முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலே துப்பாக்கியால் சுட்டுகொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த அப்துல்லா சலே ஆதரவாளர்கள் ஏமனில் உள்ள ஈரான் தூதகரத்தை தாக்கி தீவைத்து கொளுத்தினர். இதனால் அங்கு வரலாறு காணாத பதற்றம் நிலவி வருகிறது.