அப்துல் கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, ராமேஸ்வரத்தில் ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

234

அப்துல் கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, ராமேஸ்வரத்தில் ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 2-வது ஆண்டு நினைவு தினம் வரும் 27ம் தேதி அனுசரிக்கப்படவுள்ளது. அவரது நினைவிடத்தில் 15 கோடி மதிப்பிட்டில் கட்டி முடிக்கப்பட்ட மணிமண்டபம் நினைவு நாளில் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் எனத் தெரிகிறது. எனவே, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நடராஜன் தலைமையில் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. .