ஆத்தூர் அருகே பள்ளி மாணவியை பாதிரியார் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறி மாணவியின் உறவினர் தேவாலயத்தை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

452

ஆத்தூர் அருகே பள்ளி மாணவியை பாதிரியார் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறி மாணவியின் உறவினர் தேவாலயத்தை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே என்.பஞ்சம்பட்டி என்ற கிராமத்தில் திரு இருதய ஆண்டவர் என்னும் தேவாலயம் அமைந்துள்ளது. இங்கு கிஷோர் என்பவர் பங்கு தந்தையாக பணியாற்றி வந்தார். அதே ஊரை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவிக்கு அவர் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்பட்டதால், திண்டுக்கலுக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் அந்த மாணவி கர்ப்பமடைந்ததால் ஆத்திரமடைந்த உறவினர் ஒருவர் ஆயுதங்களுடன் தேவாலயத்துக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தினார். இதனையடுத்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் போலீசார் குற்றவாளி கிஷோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.