மாணவன் என்ற பாடல் ஆல்பம் வெளியீடு..!

255

ஹிப் ஹாப் ஆதியின் தயாரிப்பில் உருவான மாணவன் என்ற பாடல் ஆல்பம் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வெளியிடப்பட்டது.

தமிழ் திரைப்பட இசை அமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதியின் தயாரிப்பில் உருவான மாணவன் என்ற பாடல் ஆல்பம் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் யூ டியூப் பிரபலங்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். அப்போது ஹிப் ஹாப் ஆதியின் உருவம் பொறித்த ஓவியத்தை ரசிகர்கள் பரிசாக வழங்கினர். ரசிகர்கள் வேண்டுகோளை ஏற்று அவர் இரண்டு பாடல்களை பாடினார்.