செல்போன் சேவைகளை பெற ஆதார் எண் கட்டாயம் என, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

323

செல்போன் சேவைகளை பெற ஆதார் எண் கட்டாயம் என, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆதார் எண், சமையல் எரிவாயு இணைப்பு, ரேஷன் கடை, வங்கி கணக்கு உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் இணைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,செல்போன் சேவைகளில் ஆதார் எண்ணை கட்டாயமாக்குவது குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அனைத்து செல்போன் சேவைகளையும் பெற ஆதார் எண் கட்டாயம் என அதிரடியாக தீர்ப்பு வழங்கி உள்ளது.
இதையடுத்து, ஓராண்டுக்குள் ஆதார் எண்ணை செல்போன் சேவைகளுடன் இணைக்க மத்திய அரசு உறுதியளித்துள்ளது.