அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

277

அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பதவியேற்ற பிறகு அனைத்து வகையான அரசு திட்டங்களுக்கும் ஆதார் எண்ணை கட்டாயப்படுத்தி வருகிறது. முதலில் சமையல் எரிவாயு இணைப்பை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, வங்கிக்கணக்கு தொடங்குவதற்கு, செல்போன் இணைப்பு பெறுவதற்கு போன்றவற்றிக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டது. மோசடிகளை தடுக்கும் வகையில் ஆதார் எண் கட்டாயமாக்கப்படுவதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமில்லை என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆதார் அட்டைக்கு பதிலாக குடும்ப அட்டை, ஓட்டுநர் அட்டை உள்ளிட்ட ஏதேனும் ஒன்றை அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு பயன்படுத்தலாம் என்று கூறினார்.