ஆதார் அட்டை கட்டாயமாக்கப்படுவதால், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் முடங்கியுள்ளன.

437

ஆதார் அட்டை கட்டாயமாக்கப்படுவதால், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் முடங்கியுள்ளன.
ஆதார் அட்டையை பள்ளி மாணவர்களுக்கு கட்டாயப்படுத்துவதால், பள்ளிக்கல்வித்துறை சார்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை திட்டங்கள், பெண் குழந்தைகளின் பள்ளி சேர்க்கை விகிதத்தை அதிகரிப்பதற்கான சிறப்புத் திட்டங்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் பள்ளி சேர்க்கைக்கான சிறப்புத் திட்டங்கள் ஆதார் அட்டையை கட்டாயமாக்குவதால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
மதிய உணவுத்திட்டம் மற்றும் அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கான சர்வ சிக்ஷ அபியான் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், மாணவர்களுக்கு ஆதார் அட்டையை கட்டாயப்படுத்துவதற்கு, போதுமான அவகாசம் தேவை என வலியுறுத்தப்பட்டுள்ளது.