பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி : செர்பியாவின் பிலிப் கிராஜினோவிச்சு இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார்..!

356

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் பிலிப் கிராஜினோவிச்சு இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில், பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த அரையிறுதி போட்டியில் செர்பியாவின் பிலிப் கிராஜினோவிச்சு, அமெரிக்க வீரர் ஜான் இஸ்னருடன் மோதினார். இதில் பிலிப் 6க்கு 4, 6க்கு 7, 7க்கு 6 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம் அடைந்தார்.
மற்றொரு அரையிறுதிப்போட்டியில், பிரான்ஸ் வீரர் ஜூலியன் பென்னெட்டோவும், அமெரிக்க வீரர் ஜாக் சாக்வும் மோதினர். இதில் சாக், 7க்கு 5, 6க்கு 2 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றார். இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் பிலிப், சாக்வுடன் மோதுகிறார்.