ஆருஷி கொலை வழக்கில் இருந்து அவரது பெற்றோர் ராஜேஷ் தல்வார், நூபுர் தல்வார் ஆகியோர் விடுதலை..!

345

போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால் ஆருஷி கொலை வழக்கில் இருந்து அவரது பெற்றோர் ராஜேஷ் தல்வார், நூபுர் தல்வார் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
2008ம், உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில், ஆருஷி தல்வார், என்ற 14 வயது சிறுமியும், வீட்டு பணியாளரான ஹேம்ராஜும் மர்மமான முறையில் கொல்லப்பட்டனர்.
hqdefault
ஆருஷியின் பெற்றோரான ராஜேஷ் தல்வார், நூபுர் தல்வார் ஆகியோரே கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், இருவருக்கும் 2013ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்தது. இந்த தண்டனையை எதிர்த்து அலகாபாத் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அனைத்து சாட்சியங்களும் விசாரிக்கப்பட்டன. இந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய அலகாபாத் உயர்நீதிமன்றம், சந்தேகத்தின் பலனை ஆருஷியின் பெற்றோருக்கு சாதகமாக்கி உத்தரவிட்டது. குற்றவாளிகள் என்பதற்கான போதிய ஆதாரங்கள் இல்லையென கூறி ஆருஷியின் பெற்றோரை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.