முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக ஆட்சி செய்து வருவதாக ஆறுக்குட்டி பாராட்டு !

314

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக ஆட்சி செய்து வருவதாக கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுக்குட்டி பாராட்டு சான்றிதழ் அளித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் அணியில் இருந்த கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுக்குட்டி கருத்து வேறுபாடு காரணமாக அந்த அணியிலிருந்து விலகினார். இந்நிலையில், சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுக அம்மா அணியில் அவர் இணைந்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஆறுக்குட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக ஆட்சி செய்து வருவதாக பாராட்டு தெரிவித்தார். ஓ.பி.எஸ். அணியினர் தம்மை முற்றிலும் புறக்கணித்தாக குற்றம் சாட்டிய அவர், தமது தொகுதி வளர்ச்சியில் முதலமைச்சர் தனிக்கவனம் செலுத்துவதாக தெரிவித்தார்.