முல்லைப்பெரியாரில் கேரள அரசு வாகன நிறுத்தம் அமைப்பதற்கு எதிர்ப்பு : தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

251

முல்லைப்பெரியார் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கேரள அரசு வாகன நிறுத்தம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குமுளியில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம் முல்லைப்பெரியார் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கேரள அரசு வாகன நிறுத்தம் ஒன்றை அமைத்து வருகிறது. தமிழகத்திற்கு எதிராக தொடர்ந்து, சட்ட விரோதபோக்கை கடைபிடித்து வரும் கேரள அரசைக் கண்டித்தும், அணைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்தத்தை அகற்றக்கோரியும் குமுளியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் கேரள மற்றும் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர் .