ஆணாதிக்கம் மிகுந்த சமூதாயத்தில் போராட்டங்களையே வாழ்க்கையாக கொண்டு வெற்றி பெற்றவர் ஜெயலலிதா என ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.

245

ஆணாதிக்கம் மிகுந்த சமூதாயத்தில் போராட்டங்களையே வாழ்க்கையாக கொண்டு வெற்றி பெற்றவர் ஜெயலலிதா என ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.
முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மற்றும் துக்ளக் ஆசிரியர் சோவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அச்சங்கத்தின் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொன்வண்ணன்,
ரஜினிகாந்த், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஜெயலலிதா மற்றும் சோவின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அப்போது, பேசிய ரஜினிகாந்த், ஆணாதிக்கம் மிகுந்த சமூதாயத்தில் போராடி முன்னுக்கு வந்தவர் ஜெயலலிதா என புகழாரம் சூட்டினார். பொது வாழ்க்கைக்காக தமது சொந்த வாழ்க்கையே தியாகம் செய்தவர் என்று கூறிய ரஜினிகாந்த், ஜெயலலிதாவும், சோவும் நெருங்கிய நண்பர்களாக திகழ்ந்தனர் என்று தெரிவித்தார்.