திருவள்ளூர் -அரக்கோணம் இடையே ரயில் நிலையத்தில் ஆண், பெண் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

209

திருவள்ளூர் -அரக்கோணம் இடையே ரயில் நிலையத்தில் ஆண், பெண் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர்-அரக்கோணம் இடையே உள்ள மணவூர் ரயில் நிலையத்தில், ஆண் மற்றும் பெண் சடலம் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தையும், 37 வயது மதிக்கத்தக்க பெண் சடலத்தையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், உயிரிழந்தவர் நரேஷ் என்பதும், அவர் கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் கணவன், மனைவியாக இருக்கலாம் என கூறப்படுகிறது.