அருகே ஆம்பூர் அடுத்தடுத்து 2 வீடுகளில் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை.

157

ஆம்பூர் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் பகுதியை சேர்ந்த கார் ஓட்டுனரான பர்கதுல்லா , தன்னுடைய உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு இன்று வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள், வெள்ளிப்பொருட்கள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.