ஆம்பூரில் ரூ.8 லட்சம் மதிப்புடைய போதைப்பொருட்கள் பறிமுதல் !

309

ஆம்பூரில் அரசால் தடை செய்யப்பட்ட 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு ஆணையர் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர் அதன்படி,வேலூர் மாவட்டம் ஆம்பூரில் அதிகாரிகள் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெங்களூருவிலிருந்து சென்னைக்கு வந்த அரசுப் பேருந்தை சோதனையிட்டனர். அந்தப் பேருந்தில், அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான்பராக், குட்கா, போன்ற போதைப்பொருட்கள் இருப்பது கண்டுபிடித்து, பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு 8 லட்சம் ரூபாய் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை ஆம்பூர் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கிற்குக் கொண்டு சென்று எரித்து அழித்தனர்.