ஆலங்குளம் அருகே காரும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில், காவல்துறையைச் சேர்ந்த வாகன ஓட்டுநரும், செய்தியாளர் ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

278

ஆலங்குளம் அருகே காரும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில், காவல்துறையைச் சேர்ந்த வாகன ஓட்டுநரும், செய்தியாளர் ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காவல்துறையைச் சேர்ந்த வாகன ஓட்டுநரான சுந்தர்ராஜ், செய்தியாளர் சங்கர சுப்பிரமணியன் மற்றும் ஆசிரியர் வேல்முருகன் ஆகியோர் திருநெல்வேலியில் இருந்து புளியங்குடிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். தென்காசியில் இருந்து திருநெல்வேலிக்கு அரசு விரைவு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
ஆலங்குளத்தை அடுத்த நல்லூர் விலக்கு அருகே வரும்போது, எதிர்பாராத விதமாக பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில், காரில் பயணம் செய்த சங்கர சுப்பிரமணியன் மற்றும் சுந்தர்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த வேல்முருகன், தென்காசி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.