ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் புனித தலங்களில் லட்சக்கணக்கன பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

337

ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் புனித தலங்களில் லட்சக்கணக்கன பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
ஆண்டு தோறும் ஆடி அமாவாசை அன்று புனித நீர் நிலைகளில் பக்தர்கள் தங்களது மூதாதையர்களுக்கு எள் தண்ணீருடனான பிண்டங்களை நீரில் கரைத்து வழிப்பாடு செய்வது வழக்கம். இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம், ரமேஸ்வரத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி கடவுளை வழிப்பாடு செய்தனர். மேலும் தங்களது மூதாதையர்களுக்கு பிண்டங்கள் செய்து தர்ப்பணம் செய்தனர்.
இதே போல் லட்சகணக்கான பக்தர்கள் முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலில் நீராடி வழிபாடு செய்தனர். இதனை தொடர்ந்து தங்களின் முன்னோர்களுக்கு படையலிட்டு தர்பணம் செய்தனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு நாகப்பட்டினம் கோடியக்கரை கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
வேதாரண்யேஸ்வரர் கோயில் உள்ள மணிகர்ணிகை குளத்திலும் ஏராளமான பக்தர்கள் நீராடி கடவுளை வழிபாடு செய்தனர். கடலூர் வெள்ளி கடற்கரையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு மூதாதையருக்கு தர்பணம் செய்து கடலில் நீராடி பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் புனித தலங்களில் காவல் துறையினர் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.