ஆதாருக்கு கூடுதலாக முகத்தோற்றம் பயன்படுத்த முடிவு | ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் என தகவல்..!

481

ஆதார் நம்பகத்தன்மையை உறுதி செய்ய, கைவிரல் ரேகை, கண்விழிப் படலம் ஆகியவற்றுடன், முகத் தோற்றத்தையும் பயன்படுத்தும் வசதி, ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் தொடர்பான பல்வேறு வழக்குகளை, உச்ச நீதிமன்றத்தின், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு சட்ட அமர்வு விசாரித்து வருகிறது. இந்த நிலையில், ஆதார் ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி, அஜய் பூஷண் பாண்டே உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி, ஆதார் எண்ணின் அவசியத்தை விளக்கினார். அப்போது, ஆதார் நம்பகத்தன்மையை உறுதிசெய்ய, கைவிரல் ரேகை, கண்விழிப் படலம் ஆகியவை பயன்படுத்தப்படுவதாக கூறிய அவர், முக வடிவமைப்பை பயன்படுத்தி, ஆதாரை உறுதி செய்யும் வசதி வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.