நலத்திட்டங்களுக்கு ஆதாரை கட்டாயமாக்குவதற்கு எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவு!

938

ஆதாரை கட்டாயமாக்குவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம்இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது.
சமையல் எரிவாயு மானியம் உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்கவேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது சட்டவிரோதம் என்றும், மத்திய அரசின் இந்த அறிவிப்பு தனி நபரின் அடிப்படை உரிமையில் தலையீடுவதாக உள்ளது என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து அமர்வு
நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த விவகாரம் தொடர்பாக இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி வழக்கின் இறுதி விசாரணையை அடுத்த மாதம் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.