ஆதார் எண்ணை கட்டாயமாக்குவது சட்டப்படி செல்லுமா?-உச்சநீதிமன்றத்தில் புதிய ரிட் மனு தாக்கல்!

314

வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்கும் ரிசர்வ் வங்கயின் அறிவிப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சட்டவிரோத பண பரிவர்த்தனையைத் தடுக்கும் விதமாக, திருத்தப்பட்ட புதிய விதிமுறைகளின் படி வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமே என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதன்மூலம் கருப்பு பணம் பதுக்கல், பண மோசடிகளை தடுக்க முடியும் என யோசனை தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி, நாட்டின் நலனுக்காக வாடிக்கையாளர்கள் இதனை பின்பற்ற வேண்டும் என வேண்டுக்கோள் விடுத்துள்ளது.
இதனையடுத்து, ரிசர்வ் வங்கியின் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கல் அறிவிப்பு சட்ட ரீதியாக செல்லத்தக்கதா என்று கேட்டு ரிட் மனு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனேவே ஆதார் அந்தரங்கத் தகவல்களைப்ப் பறிப்பதாகக் கூறி தொடரப்பட்ட வழக்குகளுடன் இந்த வழக்கும் சேர்த்து விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.