ஆதார் எண் தவறாகக் குறிப்பிட்டால் 10,000 ரூபாய் அபராதம்..!

161

ஆதார் எண்ணைத் தவறாகக் குறிப்பிட்டால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கும் முறை செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.

ஆதார் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து பட்ஜெட்டைத் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பான் அட்டை இல்லாதவர்கள் பான் எண்ணுக்குப் பதில் ஆதார் எண்ணைக் குறிப்பிடலாம் என அறிவித்தார். ஏற்கெனவே கார், வீடு, நிலம் வாங்கினாலும், வெளிநாட்டுப் பயணத்தின்போதும், பங்குகளில் முதலீடு செய்யும்போதும் பான் எண்ணைக் குறிப்பிட வேண்டும். புதிய விதிகளின்படி இரண்டு லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட பொருட்களை, சேவைகளை விற்கும்போதோ வாங்கும்போதோ பான் எண், ஆதார் எண் ஏதாவது ஒன்றைக் குறிப்பிட வேண்டும். இந்த நடவடிக்கைகளில் தவறான எண்ணைக் குறிப்பிடும் ஒவ்வொரு முறைக்கும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கும் முறை செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனக் கூறப்படுகிறது.