ஓட்டுனர் உரிமத்தை ஆதார் எண்ணுடன் இணைக்க சட்டம் இயற்ற முயற்சி – மத்திய அமைச்சர் ரவிஷங்கர் பிரஷாத்

205

ஓட்டுனர் உரிமத்தை ஆதார் எண்ணுடன் இணைக்க சட்டம் இயற்றுவது தொடர்பாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரஷாத் தெரிவித்துள்ளார்.

மத்தியில் பா.ஜ.க அரசு அமைந்ததிலிருந்து, ஆதார் எண்ணை மற்ற அரசு ஆவணங்களுடன் இணைக்க மக்களை கட்டாயப்படுத்தி வருகிறது. இதனால், மக்களின் அந்தரங்க தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த எதிரான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகின்றன. இந்த நிலையில், ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரஷாத் தெரிவித்துள்ளார்.

சாலை விபத்துக்களை ஏற்படுத்திவிட்டு தப்பிச்செல்பவர்களை பிடிக்க இந்த திட்டம் உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ள அவர், தொடர்பாக மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக விளக்கமளித்துள்ளார்.