உத்தரபிரதேசத்தில் நோயாளிகள் ஆம்புலன்சில் செல்ல ஆதார் அட்டை கட்டாயம் !

234

உத்தரபிரதேசத்தில் நோயாளிகள் ஆம்புலன்சில் செல்ல ஆதார் அட்டை கட்டாயம் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது
வங்கி கணக்கு தொடங்குதல், வருமான வரி செலுத்துதல், பான் அடையாள அட்டை, செல்போன் இணைப்பு பெறுதல் உள்பட பல்வேறு செயல்பாடுகளுக்கு ஆதார் அடையாள அட்டையை மத்திய அரசு கட்டாயமாக்கியது. இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் நோயாளிகள் ஆம்புலன்சில் செல்ல ஆதார் அடையாள அட்டை கட்டாயம் என்றும், ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே அரசின் இலவச ஆம்புலன்சில் செல்ல முடியும் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பொதுமக்கள், அரசு இந்த முடிவை திரும்பபெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்