ட்ராய் தலைவர் ஆர்.எஸ்.சர்மாவின் ஆதார் தகவல் திருட்டு..!

442

ட்ராய் தலைவர் ஆர்.எஸ்.சர்மாவின் டுவிட்டர் சவாலை ஏற்று அவரது ஆதார் மற்றும் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் வெளியிட்டுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ட்ராயின் தலைவரான ஆர்.எஸ்.சர்மா தனது ஆதார் எண்ணை டுவிட்டரில் பதிவிட்டு அதிலுள்ள தகவல்களை முடிந்தால் வெளியிடுமாறு ஹேக்கர்களுக்கு சவால் விடுத்தார். இந்த சவாலை ஏற்றுக்கொண்ட ப்ரான்ஸ் நாட்டை சேர்ந்த எல்லியட் ஆல்டர்சன் என்ற ஹேக்கர், சர்மாவின் ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண், ஈ மெயில், வீட்டு முகவரி, பான் எண் தொடங்கி, அவரது செல்போன் அழைப்புகள், தனிப்பட்ட புகைப்படங்கள் உள்ளிட்ட அனைத்தையும் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அத்துடன், மத்திய அமைச்சர்கள், அதிகாரிகளின் தனிப்பட்ட தகவல்கள் சிலவற்றையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், ஆதார் குறித்த அச்சத்தையும் அதிகரிக்க செய்துள்ளது.