கேரளா வெள்ள பாதிப்பு – ஏ.ஆர்.ரஹ்மான் நிதியுதவி

254

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பிரபல இசைக்கலைஞர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது குழுவின் சார்பாக ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

கேரளா மழைவெள்ள பாதிப்புக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் சாதாரண பொதுமக்கள் என அனைவரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இசைநிகழ்ச்சி நடத்தி வரும் ஏ.ஆர்.ரஹ்மான், தனது இசைக்குழுவுடன் சேர்ந்து ஒரு கோடி ரூபாய் நிதியுதவியை கேரளா வெள்ள நிவாரணத்திற்கு வழங்கியுள்ளார். இதனை ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.