கல்லூரி மாணவர்களுக்கு சென்னை காவல் ஆணையர் அறிவுரை..!

130

மாணவர்கள் தங்களது ஆற்றலை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவுரை வழங்கியுள்ளார்.

சென்னையில் மாநில கல்லூரி மாணவர்கள் சிலர் பேருந்தில் கத்தியுடன் பயணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மாநில கல்லூரிக்கு சென்ற காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வவநாதன், மாணவர்களுடன் உரையாடினார். அப்போது உங்களுக்கு எதில் ஆர்வம் இருக்கிறது அதை படியுங்கள் என்றும், ஆர்வமுள்ள விஷயங்களில் கவனத்தை செலுத்துங்கள் எனவும் அறிவுரை வழங்கினார். எதிரியிடம் அன்பு செலுத்துங்கள் என்று கேட்டுக் கொண்ட ஏ.கே.விஸ்வநாதன் தாம் படித்த போதே பன்முக திறமைகளை மேம்படுத்திக் கொண்டேன் எனவும் தெரிவித்தார்.