அரியானாவில் 8 வயது சிறுமியின் உடல் வாய்காலில் கண்டெடுக்கப்பட்டு போலீசார் விசாரணை ..

632

அரியானாவில் 8 வயது சிறுமியின் உடல் வாய்க்காலுக்கு அருகில் உள்ள பையில் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா மாநிலம் ரோஹ்டக் மாவட்டத்தில் உள்ள ஒரு வாய்க்காலில், மர்மமான முறையில் பை ஒன்று கிடப்பதை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் சோதனை நடத்தியபோது அந்த பைக்குள் 8 வயது சிறுமியின் உடல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். சிறுமியின் உடல் ஒரு வாரத்துக்கு மேலாக இங்கு கிடப்பதாகவும், அவர் எப்படி இறந்தார் என்பது பிரேதப் பரிசோதனையின் முடிவில் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். காஷ்மீரில் ஆஷிபா என்ற 8 வயது சிறுமி பாலியல் படுகொலை செய்யப்பட்டது நாட்டையே உலுக்கிய நிலையில், ஹரியானாவில் 8 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மேலும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.