8 வழிச்சாலை திட்டத்தின் நோக்கம் மற்றும் பயன்பாடுகளை பற்றி அறியாமல் அதனை எதிர்க்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.ராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை – சேலம் இடையே 8 வழிச்சாலை அமைக்கும் மத்திய அரசின் திட்டத்துக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. நிவாரணம், மாற்று நிலம் வழங்க தமிழக அரசு முன்வந்த நிலையிலும், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, இத்திட்டத்தை எதிர்த்து பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி தமிழ் மாநில காங்கிரஸ் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி டி.ராஜா, 8 வழிச்சாலை திட்டத்தின் நோக்கம் மற்றும் பயன்பாடுகளை தெரியாமல் அதனை எதிர்க்க கூடாது என்றார். இரண்டு பெரு நகரங்களுக்கு இடையே அமைக்கப்படும் இந்த சாலையால் பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.