முத்தரசன்

விலை மதிப்பற்ற கனிம வளங்களை கொள்ளையடிப்பதற்காக எட்டு வழி சாலை போடப்படுகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே எட்டு வழி சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், எட்டு வழி சாலை அமைக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். தமிழக அரசு விவசாயிகளிடம் அடக்கு முறைகளை கையாளுகிறது என்றும் முத்தரசன் குற்றம் சாட்டினார்.