இன்று 82–வது பிறந்த நாள்: பா.இராமச்சந்திர ஆதித்தனார் திருவுருவப் படத்திற்கு தலைவர்கள் மாலை!

350

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் மூத்த புதல்வரும், மறைந்த மாலைமுரசு நிர்வாக ஆசிரியருமான பா.இராமச்சந்திர ஆதித்தனாருக்கு இன்று ௮௨–வது பிறந்த நாளாகும். இதையொட்டி சென்னை மாலைமுரசு அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்துக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் மூத்த புதல்வரும், மறைந்த மாலைமுரசு நிர்வாக ஆசிரியருமான பா.இராமச்சந்திர ஆதித்தனாருக்கு இன்று ௮௨–வது பிறந்த நாளாகும். இதையொட்டி சென்னை மாலைமுரசு அலுவலகத்தில் அவரது திருவுருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

தலைவர்கள் மரியாதை
அவரது திருவுருவப் படத்திற்கு மாலைமுரசு இயக்குநரும் பா.இராமச்சந்திர ஆதித்தனாரின் மூத்த புதல்வருமான இரா.கண்ணன் ஆதித்தன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து வி.ஜி.பி. குழுமத் தலைவர் வி.ஜி.சந்தோஷம் மலர்தூவி பா.இராமச்சந்திர ஆதித்தனார் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், வர்த்தகப் பிரிவுத் தலைவர் எம்.என்.ராஜா மலர்தூவி மரியாதை செலுத்தினர். திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தர், நடிகர் ராஜேஷ், இயக்குநர் கவுதமன், நடிகர் சின்னி ஜெயந்த், தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே ஆர்.தியாகராஜன், திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம், சமத்துவ மக்கள் கழகம் தலைவர் எர்ணாவூர் நாராயணன், மாநில பொருளாளர் கண்ணன், மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம.நாராயணன், மாநில பொதுச் செயலாளர் பாவளர் ம.கணபதி. சத்தரிய நாடார் சங்கத் தலைவர் சந்திரன் ஜெயபால், மாரிதங்கம், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் மாரியப்பன், தென்சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் சி.பாஸ்கரன், பொருளாளர் வினோத்குமார் பாபு, கவிஞர் நெல்லை ராமச்சந்திரன், நாமக்கல் மாவட்டம் நாடார் பேரவை சங்கத் தலைவர் தங்கவேல், சினிமா இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவா, பத்திரிகையாளர் நலச்சங்கம் அகில இந்திய பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் தேசிய தலைவர் இல.சசிகுமார், தேசிய பொதுச் செயலாளர் பு.ராஜலட்சுமி, தேசிய பொருளாளர் புவனேசன், தமிழக துணைத் தலைவர் மாரிகண்ணன், மாநில பொதுச் செயலாளர் அருள்மொழியன், முகவை முஸ்தபா, தமிழ்நாடு மேடை நடனக் கலைஞர்கள் சங்க கவுரவ தலைவர் கடையம் ராஜூ, முன்னாள் மக்கள் தொடர்பாளர் சங்க துணைத் தலைவர் கோவிந்தராஜூ மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகளை சேர்ந்த அறிஞர்கள், வணிக பிரமுகர்கள், தொழிலதிபர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளை சார்ந்தவர்கள் நேரில் வந்திருந்த பா.இராமச்சந்திர ஆதித்தனார் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மாலைமுரசு, கண்மணி, பெண்மணி, ஸ்பெக்டரா கிராபிக்ஸ், மாலைமுரசு டி.வி. ஊழியர்களும், பணியாளர்களும், தொழிலாளர்களும் பா.இராமச்சந்திர ஆதித்தனார் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

சிலைக்கு மாலை அணிவிப்பு
காயாமொழியில் உள்ள பா.இராமச்சந்திர ஆதித்தனார் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலைக்கு காயாமொழி கிராம தலைவர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன், தையல் சுப்பிரமணிய ஆதித்தன், வெங்கடேச ஆதித்தன், ராகவன் ஆதித்தன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் தையல் சுப்பிரமணிய ஆதித்தன், குமரேச ஆதித்தன், குமரன் ஆதித்தன் மற்றும் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.