8 -வழி சாலை குறித்து நீதிமன்றத்தில் வழக்கு : சட்டத்தின் 105-வது பிரிவின்கீழ் அரசு நடவடிக்கை

266

நிலம் கையகபடுத்துதல் சட்டத்தின் 105-வது பிரிவு செல்லும் என சென்னை உயர்நீதின்றம் தெரிவித்துள்ளது.

சேலம் முதல் சென்னை வரை 277 கிலோமீட்டர் தொலைவுக்கு அமையவுள்ள 8 வழிச் சாலைக்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தி வருகிறது. சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டத்தில் உள்ள விவசாய விளைநிலங்கள் கையகப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டது. இதனை கண்டித்து 5 மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டதால் பலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், மக்களிடம் கருத்து கேட்ட பின்னரே இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும் என்று கூறி சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதி, 2013-ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் 105-வது பிரிவின்கீழ் தமிழக அரசின் நடவடிக்கை செல்லும் என்று குறிப்பிட்டார். மேலும், அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடாது என்று தெரிவித்தார்.