ஊதியக்குழு நிலுவைத் தொகை: ஆகஸ்டு மாத சம்பளத்துடன் ஒரே தவணையில் வழங்கப்படும்! மத்திய அரசு அறிவிப்பு!!

297

புதுடெல்லி, ஜூலை.30–
7–வது ஊதியக்குழு நிலுவைத் தொகை ஆகஸ்டு மாத சம்பளத்துடன் ஒரே தவணையில் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான7–வது ஊதிய கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த மத்திய அரசு அண்மையில் அறிவிக்கை வெளியிட்டது. அதன்படி ஆகஸ்டு மாதசம்பளத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு , ஓய்வூதியர்களுக்கு ஒட்டு மொத்த23.6 சதவீத ஊதிய உயர்வு கிடைக்கும் என்று மத்திய அரசு தெரிவித்தது.
அறிவிப்பு
கடந்த ஜனவரி 1–ம் தேதியை கணக்கிட்டு ஊதிய கமிஷன் பரிந்துரைகள் அமல் செய்யப்பட்டுள்ளன. எனவே நிலுவைத் தொகை பகுதி பகுதியாகவே வழங்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் முதலில் தெரிவித்தன.
இந்நிலையில் நிலுவைத்தொகை முழுவதும் ஒரே தவணையாக ஆகஸ்டு மாத சம்பளத்துடன் வழங்கப்படும் என்று மத்திய அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனால் நாடு முழுவதும் 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 53 லட்சம் ஓய்வூதியர்களும் பலன் அடைவார்கள்.