பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம்…. முதலமைச்சர் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்….

243

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது குறித்து முடிவு எடுக்க தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று நடைபெறுகிறது.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்டோரை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 போ் விடுதலை குறித்து முடிவெடுக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் சட்ட நடைமுறைகள் குறித்து விவாகதிக்க உள்ளனர். அதன் பிறகு தமிழக அரசு 7 போ் விடுதலை குறித்த தீா்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161வது பிாிவை பயன்படுத்தி ஆளுநரே 7 பேரையும் விடுவிக்க முடியும். இதனால் இன்றைய அமைச்சரவை கூட்டம் தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.