முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 74-வது பிறந்தநாள்..!

713

ராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட மூத்த தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 74-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் துணைக்குடியரசு தலைவர் ஹமீத் அன்சாாி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதனைத்தொடர்ந்து, நினைவிடத்தில் திரண்டிருந்த ஏராளமான பொதுமக்கள், காங்கிரஸ் தொண்டர்களுடன், தலைவர்களும் அமர்ந்து, மறைந்த ராஜீவ் காந்திக்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.