நடிகர் சங்க பொதுக்குழுக்கூட்டம் : நாசர், விஷால், கார்த்தி பங்கேற்பு

278

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 64வது ஆண்டு பொதுக்குழுக்கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது

நடிகர் சங்கத்தலைவர் நாசர் தலைமையில் சென்னை காமராஜர் அரங்கில் இன்று மதியம் 2 மணிக்கு பொதுக்குழுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ் மற்றும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். மூத்த நாடக நடிகர், நடிகைகளும் இந்த பொதுக்குழுவில் கலந்து கொள்கின்றனர். பொதுக்குழுவில் கலந்து கொள்ளுமாறு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்கால திட்டங்கள் குறித்து இந்த பொதுக்குழுவில் விவாதிக்கப்பட உள்ளது. நடிகர், நடிகைகள் பொதுக்குழுவில் கலந்து கொள்வதற்கு வசதியாக இன்று சினமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.