மாவட்ட நீதிபதிகள் 6 பேர் ஐகோர்ட் நீதிபதிகளாக இன்று பதவியேற்பு | தலைமை நீதிபதி இன்று பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்..!

498

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆகியவற்றுக்கு மொத்தம் 75 நீதிபதிகள் பணியிடங்கள் உள்ளது. அதில் தற்போது 54 நீதிபதிகள் பணியில் உள்ளனர். 21 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த நிலையில், உச்சநீதிமன்ற பரிந்துரையின்படி, மாவட்ட நீதிபதிகளாக பணிபுரிந்து வரும் 6 பேரை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்து மத்திய சட்ட அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, எஸ். ரமாதிலகம், ஆர். தரணி, ஆர். ராஜமாணிக்கம், டி. கிருஷ்ணவள்ளி, பொங்கியப்பன் மற்றும் ஹேமலதா ஆகிய ஆறு பேர் உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகளுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி இன்று காலை 9.30 மணிக்கு உயர்நீதிமன்றத்தில் உள்ள கூடுதல் நூலக கட்டடத்தில் நடைபெறும் விழாவில் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்னும் 15 நீதிபதிகள் பணியிடம் காலியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.