இந்தோனேஷியாவில் 6 புள்ளி 4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவானதாக தகவல் ..!

973

கிழக்கு இந்தோனேஷியாவில் 6 புள்ளி 4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்தோனேஷியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள பாண்டா கடலில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து, சுமார் 171 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி 4 என பதிவாகியுள்ளதாக இந்தோனேஷிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக, கட்டிடங்கள் குலுங்கியதால், பொதுமக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு, வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். வலுவான நிலநடுக்கத்தை அடுத்து, பாண்டா கடல் பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடற்கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.