570 கோடி ரூபாய் பிடிபட்ட வழக்கில் சி.பி.ஐ. அறிக்கை நகலை வழங்க கோரி தி.மு.க. சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு..!

216

திருப்பூரில் 570 கோடி ரூபாய் பிடிபட்ட வழக்கின், சி.பி.ஐ. அறிக்கை நகலை வழங்க கோரி தி.மு.க. சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, திருப்பூரில் மூன்று கண்டெய்னர் லாரிகளில் 570 கோடி ரூபாய் பிடிபட்டது. இது தொடர்பான விசாரணையில், பிடிபட்ட பணம் பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமானது என்றும், கோவை கிளையில் இருந்து விசாகப்பட்டினம் கிளைக்கு கொண்டு செல்லப்பட்டது என்றும் சி.பி.ஐ. தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. தாக்கல் செய்த அறிக்கை நகலை வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தி.மு.க. வழக்கறிஞர் வில்சல் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி சுப்பையா, அடுத்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தார்.