தமிழகத்தில் மட்டுமே உணவு மானியத்திற்காக ரூ. 5500 கோடி ஒதுக்கீடு !

246

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் உணவு மானியத்திற்காக 5 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
நெல்லை கூட்டுறவு பண்டக சாலை, அம்மா மருந்தகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளாக தரமான உணவு வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். சிறப்பு பொது விநியோகம் திட்டம் தமிழகத்தில் மட்டும்தான் செயல்படுத்தப்பட்டு வருவதாக பெருமையுடன் கூறிய செல்லூர் ராஜூ, விலைவாசியை கட்டுப்படுத்த தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.