500 கிலோ எடையுள்ள பெண்ணின் உடல்நிலையில் முன்னேற்றம் | மும்பை மருத்துவமனை அறிக்கை

206

எகிப்து நாட்டை சேர்ந்த அதிக எடையுள்ள பெண்ணின் உடல்நிலையில், நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மும்பை மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
எகிப்து நாட்டில் உள்ள கெய் ரோவை சேர்ந்த 500 கிலோ எடையுள்ள எமான் அகமது, உடல் பருமனால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கை ஆனார். சுமார் 25 ஆண்டுகள் படுக்கையிலேயே அவர் காலம் கழிந்தது. பல்வேறு நாடுகளை சேர்ந்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க முன்வராததையடுத்து,
மும்பையை சேர்ந்த மருத்துவமனை அவருக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்தது. இதற்காக தனி விமானம் மூலம் கொண்டுவரப்பட்ட எமானுக்கு மும்பை மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். தற்போது அவரது உடல்நிலை தொடர்பாக அறிக்கையை அந்த மருத்துவமனை வெளியிட்டுள்ளது. அதில் எமானின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.