பழைய ரூபாய் நோட்டுகளை இன்று முதல் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வங்கியில் டெபாசிட் செய்ய முடியாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

482

பழைய ரூபாய் நோட்டுகளை இன்று முதல் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வங்கியில் டெபாசிட் செய்ய முடியாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்தியாவில் கருப்பு பணத்தை கட்டுப்படுத்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. அதற்கு பதிலாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை குறைந்த அளவில் ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இதனால் மக்களிடைய பணப்புழக்கம் குறைந்து, பெரும் அவதிக்கு ஆளாகியினர். வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய டிசம்பர் 30ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது.

இந்த நிலையில், பழைய ரூபாய் நோட்டுகளை இன்று முதல் 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வங்கியில் டெபாசிட் செய்ய முடியாது என்று ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. மேலும், ஒரு நாளைக்கு ஒருவர் தன்னுடைய வங்கி கணக்கில் 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்வோர், அதற்கான விளக்கத்தை வங்கி அதிகாரிகளிடம் தெரிவிக்கவேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு நாடு முழுவதும் மக்களிடையே பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.